முழு ஊரடங்கு எதிரொலி – சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தம்

சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-25

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, கோவை, மதுரையில் நாளை முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சேலம், திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், முழு ஊரடங்கின்போது வாகன போக்குவரத்தை முழுவதும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, சென்னையில் அவசர பாஸ் வழங்கும் பணிகள் 4 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கும் பணியும் நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது திருமணம், இறப்பு மற்றும் சிகிச்சை உள்ளிட்ட அவசர தேவை பயணங்களுக்கு அரசு சார்பில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு பயணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை, ஆன்லைன் மூலமாக பொதுமக்கள் அனுமதி அட்டைகள் பெற்று வந்தனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *