இந்தியாவில் 24 ஆயிரத்தை தாண்டியது, கொரோனா பாதிப்பு – 775 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 775 பேர் பலியாகி உள்ளனர்.

டெல்லி, ஏப்ரல்-25

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், புதிதாக வைரஸ் தொற்று உறுதியாவோரின் எண்ணிக்கை கூடி வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 24,506 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1429 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 57 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 775 ஆக உயர்ந்துள்ளது. 5063 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு 6817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 301 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 2815 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 127 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 2514 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *