ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.3.13 கோடி வசூல்…தமிழக காவல்துறை தகவல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,12,282 கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,813 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-25

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,12,282 கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13,174 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியதாக 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12,813 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *