தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-25

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரண உதவியாக வழங்கப்படும். இஎஸ்ஐ கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படும். இதற்காக 2,177 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *