சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சியில் இன்று மட்டும் 3 மணி வரை கடைகள் திறந்திருக்க முதல்வர் அனுமதி

4 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, ஏப்ரல்-25

தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில், ஏப்ரல் 26ந் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 29ம் தேதி புதன் இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதேபோன்று, சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி ஞாயிறு காலை 6 மணி முதல் ஏப்ரல் 28ம் தேதி செவ்வாய் இரவு 9 மணி வரை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் இன்று அதிக அளவில் காய்கறி சந்தைகள், மளிகை கடைகளில் குவிந்து வருகின்றனர். வரும் 4 நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு இன்று ஒரு நாளே கடைசியாக இருப்பதால், கடைகளுக்கு செல்லும் மக்கள், சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற முடியாத சூழல் எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் ஒன்றாக கூடுவது தவிர்க்கப்படும் வகையில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 5 மாநகராட்சிகளில் இன்று பிற்பகல் 3 மணி வரை காய்கறி, மளிகைக் கடைகள் திறந்திருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *