ஆர்டர் செய்தால் ஆவின் பால் மற்றும் பொருட்கள் வீட்டுக்கே வரும்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆவின் பால், பால் பொருட்களை நுகர்வோரின் வீடு தேடி சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 24ம் தேதி முதல் ஜோமட்டோ, டன்ஜோ நிறுவனங்கள் மூலம் சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-24

சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை நான்கு நாள்களுக்கும் சேலம், திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஏப். 26 முதல் 28 வரை மூன்று நாள்களுக்கும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் சார்ந்த உப பொருள்கள் வீடு தேடி வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உணவு விநியோகம் செய்துவரும் சொமாட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட உபபொருட்களையும் பொதுமக்கள் ஆர்டர் செய்து பெறலாம். தற்போது ஆவின் முகவர்களுக்கான நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *