வேலை, பணம், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடக்க யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் – ப.சிதம்பரம்

தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாழ் போட்டு எத்தனை நாள்களுக்கு அடைக்க முடியும்?” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-24

நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 -ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இதனால், அதிகயளவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில், நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும். தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *