காந்தியடிகள் பிறந்ததினம்: தமிழக அரசு சார்பில் மரியாதை

சென்னை, அக்டோபர்-02

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு கீழ் உள்ள உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் உடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காந்தியடிகளை போன்றும் வகையிலான பாடல்களை கர்நாடக இசைக்கலைஞர்கள் பாடி காண்பித்தனர். முன்னதாக காந்தியடிகளை நினைவு கூரும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *