கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..

கோவையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கோவை, ஏப்ரல்-24

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் வேலுமணி தீவிரமாக செய்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், “கோவை மாவட்டத்தில் செயல்படும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கப்படும். இதற்கான செலவை அதிமுக கொடுக்கும்” என அமைச்சர் வேலுமணி கூறியிருந்தார்.

கோவையில் அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவது, நடமாடும் காய்கறி கடைகளை துவக்கி வைப்பது, சமூக விலகலை மக்களுக்கு அறிவுறுத்துவது, ட்விட்டர் பக்கத்தில் உதவி கேட்போருக்கு உதவி செய்வது என முழு வீச்சில் அமைச்சர் வேலுமணி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாய்பாபா காலனி பகுதி பூசாரிபாளையம் 21வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியினை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார். இதேபோல்,
கோவை பூசாரிபாளையத்தில் இன்று கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *