சட்டவிரோதமாக குடியேறியவர்களை விடப்போவதில்லை-அமித்ஷா

சென்னை, அக்டோபர்-01

அத்துமீறி, சட்டவிரோதமாக குடியேறிய ஒருவரையும் விட்டுவைக்கப்போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்கத்தில் 2021ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்றார். அத்துமீறி நுழைந்த ஒருவரையும் விடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அமித்ஷா, சட்டவிரோதமாக குடியேறியவர்கள், சரியான இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று உறுதிபடக் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பிற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் குடியுரிமை திருத்த மசோதா மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக கட்சி தொண்டர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *