இடைத்தேர்தல் பணிகளுக்கு 6 துணை ராணுவ படையினர் தேவை

சென்னை, அக்டோபர்-01

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்ரவண்டி தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 6 கம்பெனி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி திருத்தத்திற்கான காலக்கெடு திங்கட்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாக்காளர் பெயர் சரிபார்ப்பு திட்டத்தில் இதுவரை 23 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் பெயர் மற்றும் முகவரியை சரி பார்த்ததாகவும், செல்போன் செயலி மூலம் மட்டும் 9 லட்சம் பேரும், சேவை மையம் மூலம் 12 லட்சத்து 85 ஆயிரம் பேரும் பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்து உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக 6 துணை கம்பேனி துணை ராணுவ படையினர் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *