எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தாலே கைது-உச்சநீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி, அக்டோபர்-01

எஸ்சி,எஸ்டி சட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது முந்தைய உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பில், எஸ்சி,எஸ்டி சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தாலே குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவை திரும்ப பெற்றுள்ளனர். எஸ்சி,எஸ்டி சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தாலே கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *