சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் சோதனைகளை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-17

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராமதாஸ், தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் கொரோனா தொற்று அளவு குறைந்து வருவது நிம்மதியளிக்கிறது. சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளில் சோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதன் மூலம் இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்ற வேண்டும்”. மேலும், சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா தொற்று மையமாக திகழ்வதாகவும், அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, இதில் வழக்கு தொடர என்ன இருக்கிறது? காவல் அரண்களை அதிகப்படுத்தி மக்களின் வருகைத் தடுத்தால் போதுமே என ராமதாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *