இடதுசாரி கட்சிகளுக்கு திமுக நன்கொடை-ஸ்டாலின் விளக்கம்

சென்னை, அக்டோபர்-01

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த விவகாரம் தொடர்பாக, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே பதில் அளித்துவிட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட முத்துகுமரன் தெருவில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அவரது முன்முயற்சியில் கொளத்தூர் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளை விரிவாக குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இடதுசாரி கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது பற்றி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளது பற்றிய கேள்விக்கு, வருமான வரித்துறைக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இதுபற்றி ஏற்கெனவே பதில் கூறிவிட்டதால், வேறு யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *