தமிழகத்தில் மாவட்டங்கள் வாரியாக எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னை தொடர்ந்து முதலிடம்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, ஏப்ரல்-16

தமிழகத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒருவர் பலியானதால் மொத்த பலி எண்ணிக்கையும் 15 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் சென்னை 217 தொற்றுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் கோவை 127 பாதிப்புகளுடனும், திருப்பூர் 80 பாதிப்புகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

அதற்கு அடுத்த 4வது இடத்தில் ஈரோடு 70 பாதிப்புகளுடன் உள்ளது. திண்டுக்கல் 65, நெல்லை 58, செங்கல்பட்டு, நாமக்கல் 50, மதுரை 44, திருச்சி 43, கரூர், தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 41 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ராணிப்பேட்டை 39, நாகை 38, தூத்துக்குடி 26, விழுப்புரம், சேலத்தில் தலா 24, கடலூர் 20, வேலூர் 19, தஞ்சை 18, திருப்பத்தூர், விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரியில் 16, திருவண்ணாமலை 12, சிவகங்கை 11, ராமநாதபுரத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உதகை, தென்காசியில் தலா 9 பேர், காஞ்சிபுரம் 8, கள்ளக்குறிச்சி 3, அரியலூர் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் மிகவும் குறைவாக, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *