2020 ஐபிஎல் தொடர் தள்ளிவைப்பு.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

மும்பை, ஏப்ரல்-16

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் ஐபிஎல் போட்டி முதலில் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஐபிஎல் போட்டி, மார்ச் 29 முதல் மே 24 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் விலகி, பாதுகாப்பான சூழல் உருவாகும்போதுதான் ஐபிஎல் போட்டி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐன் இந்த முடிவால், ஐபிஎல் தொடரை பெரிதும் எதிர்பார்த்து இருந்த வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *