மாணவர்களை அரசியலுக்கு இழுத்த கமல்

சென்னை, அக்டோபர்-01

மாணவர்கள் வாக்களிப்பதோடு இருந்துவிடாமல் அரசியலில் ஈடுபடவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்ததிலிருந்து பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் சமூக வலைதளங்களை முறையாக் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது மாணவர்கள் அரசியல் பேசுவதில் இருந்து ஒதுங்கி இருக்கக் கூடாது, கறைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்து ஒதுங்கி இருந்ததால் தான் அரசியலில் கறை படிந்துள்ளது. அரசியல் பேசாமல் கல்வியும், விவசாயமும் முன்னேறாது. எந்த மொழியையும் நான் எதிர்க்கவில்லை, தொடர்பியல் கருவியான மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது. வாரிசு அரசியலை சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *