தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 1242 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று புதிதாக 38 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-15

இதுதொடர்பாக சென்னையில் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர் கூறியதாவது:-

‘தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21,994 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் 2,739 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இன்றைக்கு புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 34 பேருக்கு நேரடி பாதிப்பு, 3 பேர் வெளிநாட்டிற்குச் சென்று வந்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள். மற்றொருவர் அரசு மருத்துவர்.

இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 37. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 118. உயிரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமாக தமிழகத்தில் 26 ஆய்வகங்கள் உள்ளன. இந்தியாவிலேயே பரிசோதனை ஆய்வகங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான். ஒரு நாளில் 5,320 பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *