அதிமுகவுடன் காங்கிரஸ் ரகசிய பேச்சுவார்த்தை-கராத்தே தியாகராஜன்

சென்னை, அக்டோபர்-01

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகளுடன் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்திவருவதாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகராஜன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதற்கு பிறகு செய்தியாளார்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன் ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் முக்கிய தலைவராக ரஜினி பேசப்பட்டவர் என்றும், ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் அதற்கு திமுக தான் காரணம் எனக்கூறிய கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் தலைவர்கள் அறிவாலயத்தின் வாசலில் காத்திருப்பது சரி இல்லை என்றார். ப.சிதம்பரத்தின் தயவால் தான் கே.எஸ்.அழகிரி தமிழக காங்கிரஸ் தலைவராக ஆனார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ரகசியமாக  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *