இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9152ஆக உயர்வு – பலி எண்ணிக்கை 308ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, ஏப்ரல்-13

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 856 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 149 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 1043 பேருக்கும், டெல்லியில் 1154 பேருக்கும், ராஜஸ்தானில் 804 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 564 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 483 பேருக்கும், தெலுங்கானாவில் 504 பேருக்கும், கேரளாவில் 376 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *