இடுப்பு படத்தை வெளியிட்டு இளைஞர்களை துடிக்க வைத்தது ஏன்? – ரம்யா பாண்டியன்

சென்னை ஆகஸ்ட் 27:

இடுப்பு படத்தை வெளியிட்டு வைரலானது ஏன் என்பதற்கு ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி படம் வெளியிட்டது பற்றி குறிப்பிட்டு பேசினார்.

நடிகைகள் வாய்ப்புகளுக்காக அவ்வப்போது புதுப்புது காஸ்ட்யூமில் கலக்கலாகவும் கவர்ச்சியாகவும் ஃபோட்டோ ஷூட் நடத்தி வெளியிடுவார்கள். அந்த படங்கள் பற்றிய டாக் சில நேரம் செம ஹாட்டாக இருக்கும் சில நேரம் மொக்கையாக இருக்கும். அப்படி ஃபோட்டோ ஷூட் நடத்தி வெளியிட்ட ஜோக்கர் திரைப்பட கதாநாயகி ரம்யா பாண்டியன் வைரல் ஆகிவிட்டார். காரணம் அவர் மேக் அப் இல்லாமல் புடவையில் அவர் வெளியிட்ட கிளுகிளு கவர்ச்சி புகைப்படங்கள். படத்தைப் பார்த்த பாதி பேர் ரம்யா பாண்டியனின் இடுப்பை பற்றிதான் பேசுகிறார்கள். இது பற்றி பலவிதமான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இது தொடர்பாக நடிகை ரம்யா பாண்டியன் சில கருத்துக்களை ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ ஷூட் எடுப்பதற்கான முக்கிய காரணம் நானே என்னை சுய மதிப்பீடு செய்து கொள்வதற்காக மட்டுமே. உடல் எடை, தோற்றம் இதில் ஏதாவது மாறுதல் தேவைப்படுகிறதா என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே நான் எடுத்த புகைப்படங்கள் இவை. இதன் மூலம் எனது தன்னம்பிக்கை அதிகமாகிறது. புடவையில் என் எப்படி வைரல் ஆனது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது என்றார். ஃபோட்டோகிராபர் சுரேந்தரின் ஐடியாவில் தான் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஒரே இரவில் எப்படி இந்த புகைப்படங்கள் இப்படி வைரல் ஆனது என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக உள்ளது என்று தமது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *