சென்னையில் பிரமாண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

சென்னை, அக்டோபர்-01

நாட்டிலேயே முதன்முறையாக சென்னை கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.  

சென்னையில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. மக்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாத காரணத்தினால், தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் தண்ணீருக்கு பதிலாக தமிழக அரசு மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது.

கொடுங்கையூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரவையில் அறிவித்திருந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கண்காணிப்பில் சென்னை பெருநகர குடிநீர் வடிகால் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டன. 348 கோடி ரூபாய் செலவில், நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பிரமாண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தது.

இந்த சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், தங்கமணி, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி. கருப்பணன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டர். மேலும், தலைமை செயலர் சண்முகம், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அதிகாரிகளும் பங்கேற்றனர். முன்னதாக விழா மலரை முதல்வர் பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *