தங்கம் விலை சவரனுக்கு 344 ரூபாய் சரிந்தது

சென்னை, அக்டோபர்-01

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 344 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.28, 360 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவைகளால் இந்தியாவில் கடந்த மாதம் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

30-ம் தேதி மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.28 ஆயிரத்து704 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் 3588 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் செவ்வாய்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் (22 கேரட்) விலை ஒரு சவரனுக்கு 344 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ரூ.28, 360  என்ற அளவில் விற்பனை ஆகிறது. கிராமுக்கு 43 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.3545-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1800 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இதேபோல் வெள்ளி விலை கிலோவுக்கு மேலும் 800 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.47 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி 47 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *