தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – இன்று மாலை அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய முடிவு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முக்கிய முடிவு செய்யப்படவுள்ளது.

சென்னை, ஏப்ரல்-11

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட 19 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. மேலும் ஊரங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *