தமிழக அரசுக்காக மத்திய அரசிடம் கேள்வி கேட்ட ராமதாஸ்..!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, ஏப்ரல்-10

கொரோனா வைரஸ் தொற்று விவாகரத்தில் ட்விட்டர் மூலம், தினமும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் ரூ.16,000 கோடி கேட்ட நிலையில், ரூ.510 கோடி மட்டும் மத்திய அரசு ஒதுக்கினால் அதைக் கொண்டு என்ன செய்ய முடியும்? கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்

மேலும், ஒரு ட்விட்டில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 35,198 பேருக்கு கொரோனா தொற்று, 2,381 பேர் உயிரிழப்பு என்ற புள்ளிவிபரம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவே இத்தகைய பேரழிவை சந்திக்கும் போது, நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள #சமூகஇடைவெளி தான் ஒரே தீர்வு. ஊரடங்கை கடைபிடிப்போம்; உயிர் காப்போம்! என ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *