விஜய்யுடன் இணைந்த விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

செப்டம்பர்-30

நடிகர் விஜய்யின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து திரைக்கு வரவுள்ள படம் பிகில். இந்தப் படத்துக்கு பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தளபதி 64 என்று தற்போதைக்கு குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய், விஜய் சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் தளபதி-64 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *