லாக் டவுன் மாஸ்டர் படத்திற்கு நாக் டவுன் இல்லை – லோகேஷ் கனகராஜ்

லாக் டவுன் மாஸ்டர் படத்திற்கு நாக் டவுன் இல்லை விரைவில் ரிலீஸ் ஆகும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஏப்ரல்-9

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாத நிலையில், சோகத்துடன் இருக்கும் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுக்கும் விதமாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட் போட்டுள்ளார் .
இந்நிலையில், மாஸ்டர் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளது. லாக் டவுன் மாஸ்டர் படத்திற்கு நாக் டவுன் இல்லை விரைவில் ரிலீஸ் ஆகும் என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஷேர் செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வர வேண்டிய நேரத்துல மாஸ்டர் கண்டிப்பா வரும், இப்போ கொண்டாட்டத்தை விட பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *