தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா – பாதிப்பு 834 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-9

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மேலும் 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 59,911. மேலும், 293 பேர் அரசுக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 32,896. இதுவரை 7,267 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 738 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்றைக்கு புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 84. மீதியுள்ள 12 பேரில் 3 பேர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். எஞ்சிய 12 பேரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள். இதில் ஒருவர் மருத்துவர். எனவே, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது. டெல்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர்களில் 763 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 554 பேர் நேரடியாகவும், 188 பேர் அவர்கள் மூலமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்’

இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *