காக்கிச்சட்டையில் மனைவியுடன் கலக்கும் ரஜினி
செட்பம்பர்-30
தர்பார் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி காக்கிச்சட்டையில், அவரது மனைவி லதாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக களமிளங்குகிறார்.
அவ்வப்போது, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் ரஜினியின் புகைப்படங்கள் சமூக வளைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. தற்போது, ரஜினி காக்கிச்சட்டையில் அவரது மனைவி லதாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில், அவர், நாற்காலியில் அமர்ந்துள்ளார். ரஜினி மீது கை போட்டவாறு அவரது மனைவி நின்றூ கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.