பணத்தை மட்டுமே நம்பியிருக்கும் கட்சி திமுக-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, செப்டம்பர்-30

திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்தது என்பதை சி.பி.ஐ. அமைப்பு விசாரிக்க வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசைகளை வழங்கினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், திமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சி எவ்வளவு பணம் கொடுத்தது என்பதை மத்திய அரசு வெளிச்சத்திற்கு கொண்டுவரவேண்டும் என்றும், சிபிஐ விசாரித்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை, பணத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது என்று சாடிய அமைச்சர், நீட் தேர்வை மத்திய அரசு நடத்தினாலும், முறைகேடுகள் நடக்கும்பட்சத்தில் சட்டத்தின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் மடியில் கணமில்லை என்பதால், எங்களுக்கு வழியில் பயமில்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *