முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
புதுடெல்லி, செப்டம்பர்-30
கல்குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை அய்யம்பாளையத்தில் உள்ள கல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டியதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் ஐ. பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கல்குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக பதில் தருமாறு ஐ.பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.