இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

செப்டம்பர்-30

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காமராஜ்நகர் தொகுதிக்கும் அடுத்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வனும், தி.மு.க. சார்பில் புகழேந்தியும் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரியில் அ.தி.மு.க. சார்பில் நாராயணனும், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேச காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமாரும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரும் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் அனைவரும் அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரிகளிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். கடந்த 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், விக்கிரவாண்டியில் 8 பேரும், நாங்குநேரியில் 12 பேரும் மனு அளித்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (01.10.2019) நடைபெறுகிறது. அதையடுத்து, அக்டோபர் 3-ம் தேதி மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *