பிரதமரின் வருகையை எதிர்ப்பது அரசியல் அநாகரீகம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்
செட்பம்பர்-30
ஐ.ஐ.டி. நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேதிர மோடி இன்று தமிழகம் வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐ.ஐ.டி.க்கு புறப்பட்டுச் சென்றார். ஐ.ஐ.டி.யில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் உணவு மற்றும் விருந்தோம்பல் பற்றி பேசினார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகை டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ஒரு சாரர் பிரதமரை ஆதரித்தும், ஒரு சாரர் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஹேஷ்டாக்குகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாகரீகத்தின் தொட்டிலாக திகழும் தமிழகத்திற்கு பாரத பிரதமர் அவர்கள் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்க்க வேண்டும், டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்கிற அநாகரீக அரசியல் என்பது எந்த மாதிரியான மனநிலை, எந்த மாதிரியான பண்பாட்டு நிலைப்பாடு என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
