கொரோனா அச்சுறுத்தல்: 2-ம் உலகப்போருக்குப்பின் முதல்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து

விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ஏப்ரல்-2

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ் தொடர். 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந்தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது. இந்நிலையில்,

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மின்னல் வேகத்தில் பரவுவதால் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் நலனை கருத்தில் கொண்டு விம்பிள்டனை ரத்து செய்வதாக ஆல் இங்கிலாந்து டென்னிஸ் கிளப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இதற்கு முன்பு முதலாவது மற்றும் 2-வது உலகப்போரின் போது ரத்து செய்யப்பட்டது. அதாவது 1945-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டனை நடத்த முடியாத நிலைமை உருவாகி உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *