உத்தரபிரதேசம்: கனமழையால் 50 பேர் உயிரிழப்பு…

உத்தரபிரதேசம், செப்டம்பர்-30

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக உத்தரபிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்டவைகளில் சிக்கி கடந்த 2 நாட்களாக உத்தரபிரதேசத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 இதேபோன்று, பிகாரில் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இடிபாடுகளிலும் பலர் சிக்கியிருப்பதாகவும், சில பகுதிகளில், மின்சாரம் மற்றும் குடிநீர் இன்றி பொதுமக்கள் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. வீடுகள் மட்டுமின்றி, மருத்துவமனைகள், மருந்தகங்களிலும் இடுப்பளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரயில் நிலையங்களிலும் வெள்ளம் புகுந்திருப்பதால் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சில ரயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில மீட்புக்குழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் துணை ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *