முதியோர் உதவித்தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

முதியோருக்கான உதவித்தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-31

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்துப் பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் அஞ்சலக மணியார்டர் மூலமாகவும் வங்கிக் கணக்கின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் 32,45,000 பயனாளிகளுக்கு, ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய 144 தடை உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் முதியோர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கவும் அவர்கள் நலனைப் பேணவும் சிறப்பு ஏற்பாடாக பயனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நேரடியாக உதவித் தொகையினை தடையின்றி வழங்க தேவையான நடவடிக்கை மேற்கோள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முதியோர் உதவித்தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்புமேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பயனாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று உதவித்தொகை வழங்க சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் வங்கி சேவையாளர்களுக்கும், அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *