கொரோனா பாதிப்பு: நாட்டிலேயே தமிழகத்துக்கு 3வது இடம்..!

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இந்தியளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சென்னை, மார்ச்-31

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1397 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 35 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கரோனா பாதிப்புள்ள மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கொரோனாவால் அதிகபட்சமாக கேரளாவில் 234 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 216 பேரும், தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *