தொழிலாளர்கள், மாணவர்களிடம் வாடகை கேட்க வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு தடை

தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வீட்டு வாடகை வாங்கக்கூடாது. வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மார்ச்-31

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் வீட்டு வாடகை வசூலிக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் வெளிமாநிலத்திலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களிடம் ஒரு மாத காலத்துக்கு வீட்டு வாடகை வாங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மீறி அவர்களிடம் வசூலித்தால் அவரிடம் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அனைத்து நிறுவனங்களும் ஊதியம் பிடித்தம் செய்யாமல் முழுமையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *