பிப்.1 ஆம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம், வாகன பெர்மிட் ஜூன் 30 வரை செல்லும் – மத்திய அரசு

பிப்ரவரி 1-ம் தேதி முதல் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முடிந்த வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுப்பிக்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி, மார்ச்-31

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பிப்ரவரி 1 முதல் காலாவதியாகின்ற ஓட்டுநர் உரிமம், பெர்மிட்டுகள் மற்றும் பதிவு போன்ற ஆவணங்கள் செல்லுபடி ஆகும் காலத்தை ஜூன் 30-ம் தேதி வரை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் நீட்டித்துள்ளது. நாட்டில் நிலவுகின்ற தேசிய அளவிலான ஊரடங்கு மற்றும் அரசு போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மோட்டார் வாகன ஆவணங்களைப் புதுப்பிப்பதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *