தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா – பாதிப்பு 74ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-31

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 67 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 7 உயர்ந்து 74 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67-லிருந்து 74ஆக உயர்ந்துள்ளது.

அதன்படி விழுப்புரத்தை சேர்ந்த 3 பேருக்கும், மதுரையை சேர்ந்த 2 பேருக்கும், திருவண்ணாமலை, சென்னையில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *