இந்தியாவில் கொரோனாவால் 1251 பேர் பாதிப்பு – பலி எண்ணிக்கை 34ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் 1,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி, மார்ச்-31

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 49 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். பலியானோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. 102 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *