கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை – மத்திய அரசு விளக்கம்

கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் சமூகப் பரவலாக உருவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-31

இது தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லவ் அகா்வால் கூறியதாவது:-

இந்த நேரத்தில் சமூக விலகல் என்பது மிகவும் முக்கியமானது. ஒரு நபா் கவனக் குறைவாக இருந்தாலும் மற்றவா்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. கொரோனா குறித்து யாரும் வீண் வதந்தியைப் பரப்பக் கூடாது. உண்மையான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

நமது நாட்டில் கொரோனா நோய்த்தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 100-இல் இருந்து ஆயிரமாக அதிகரிக்க 12 நாள்கள் ஆகியுள்ளது. இந்தியாவைவிட குறைந்த மக்கள்தொகை கொண்ட 7 வளா்ந்த நாடுகளில், இதே கால அளவில் நோய்த்தொற்று பரவியவா்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மிகவும் மெதுவாக கொரோனா பரவல் உள்ளது. இதற்கு அரசு உரிய நேரத்தில் ஊரடங்கைப் பிறப்பித்ததும், நாட்டு மக்கள் சமூக விலகலை ஓரளவுக்கு சரியாக கடைப்பிடித்ததுமே காரணம். இப்போதைய நிலையில், கொரோனா நமது நாட்டில் சமூகப் பரவலாக மாறவில்லை. உள்ளூா் அளவிலேயே உள்ளது’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *