சென்னைக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி-மோடி

சென்னை, செப்டம்பர்-30

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் கைவிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும், பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர். அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர், பேசியதாவது, சென்னைக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தொன்மை குறித்து ஐ.நா.வில் நான் பேசியது அமெரிக்கா முழுவதும் எதிரொலிக்கிறது. இந்தியாவை பற்றி உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து உழைத்தால் இந்தியா சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெறும். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் கைவிடவேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

இதனையடுத்து, பிரதமர் மோடி சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *