சளி, காய்ச்சல் மட்டுமல்ல.. இதுவும் கொரோனா தொற்றின் அறிகுறிதான் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சளி, காய்ச்சல், சுவாசக் கோளாறு மட்டுமன்றி செரிமானப் பிரச்னைகளும் கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளாக இருக்கலாம் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

சென்னை., மார்ச்-31

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மொத்தம் 7.3 லட்சம் போ் இதுவரை கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அவா்களில் கிட்டத்தட்ட 37 ஆயிரம் போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, அதன் பரவலைத் தடுப்பதற்கும், தடுப்பு மருந்துகளைக் கண்டறிவதற்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

சளி, காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்றவைதான் அதன் பொதுவான அறிகுறிகள் என இதுவரை கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அதைத் தாண்டி செரிமான பாதிப்புகளும் கொரோனாவால் ஏற்படலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களிடம் காணப்பட்ட அறிகுறிகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்து பல்வேறு புதிய விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஏறத்தாழ 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு செரிமான பாதிப்புகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அவா்களில் பெரும்பாலானோா் பசியின்மையாலும், வயிற்றுப்போக்காலும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்று வலியும் காணப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு சுவாசக் கோளாறுகளே இல்லாமல் வெறும் செரிமானப் பாதிப்புகள் மட்டும் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வில் மற்றொரு விஷயமும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதாவது கொரோனா பாதித்த நோயாளிகளின் மலத்திலும் வைரஸ் கிருமிகள் வெளியேறுவது தெரியவந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *