கேரளாவில் மது கிடைக்காமல் தற்கொலை செய்வதை தடுக்க மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் – முதல்வர் உத்தரவு

கேரளாவில் மதுகுடிக்க முடியாமல் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தடுக்க, மது அடிமைகளுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம், மார்ச் – 30

கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் கேரளாவில் சிலர் தற்கொலை செய்துள்ளனர். மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுபற்றி முதல்வர் பினராயி விஜயன் இன்று புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மதுபானங்கள் வழங்கலாம் என கலால் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மதுவை கைவிட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கவும் அவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்க்கவும் கேரள அரசு கலால் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மதுபானம் திடீரென கிடைக்காமல் போவது, சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆனால் கேரளா முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்படியான பரிந்துரை வழங்குவது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *