உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மார்ச்-30

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 7 லட்சத்து 22 ஆயிரத்து 88 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 33 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 லட்சத்து 36 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26 ஆயிரத்து 681 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 766 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 10 ஆயிரத்து 779 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவை பொருத்தவரை கொரோனா தாக்குதலுக்கு 29 பேர் உயிரிழந்துள்ளனர். 1129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 116 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனை போல், இத்தாலியில் 10 ஆயிரத்து 779 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 97, 689 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 12,384 பேர் சிகிச்சையில் குணமாகி உள்ளனர். ஸ்பெயினில் 6,803 பேர் பலியாகி உள்ளனர். இங்கு, 80 ஆயிரத்து 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் 3,300 பேர் பலியாகி உள்ளனர். 81 ஆயிரத்து 439 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் 2,640 பேர் பலியாகி உள்ளனர். இங்கு 38 ஆயிரத்து 309 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 2,475 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 812 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானில் 2,640 பேர் பலியாகி உள்ளனர். 38 ஆயிரத்து 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் 2,606 பேர் பலியாகி உள்ளனர். 40 ஆயிரத்து 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 541 பேர் பலியாகி உள்ளனர். 62 ஆயிரத்து 095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் 152 பேர் பலியாகி உள்ளனர். 9 ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தில் 431 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்து 836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் 54 பேர் பலியாகி உள்ளனர். 1,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் 35 பேர் பலியாகி உள்ளனர். 2,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் 17பேர் பலியாகி உள்ளனர். 4 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் 14 பேர் பலியாகி உள்ளனர். 1,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 3 பேர் பலியாகி உள்ளனர். 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவில் 8 பேர் பலியாகியுள்ளனர். 1, 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 8 பேர் பலியாகி உள்ளனர். 1, 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கத்தாரில் ஒருவர் பேர் பலியாகி உள்ளனர். 634 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரசு அமீரகத்தில் 3 பேர் பலியாகி உள்ளனர். 570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பஹ்ரைனில் 4 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஒருவர் பலியாகி உள்ளனர். 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கி உள்ளது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *