இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 29 ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,024-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரசால் இந்தியாவில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, மார்ச்-29

கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் தற்போது தனது தீவிரத்தை காட்டி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க 21 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி ஆயிரத்தை தாண்டி 1024 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று புதிதாக 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அம்மாநிலத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 20 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 50 பேரும், கர்நாடகாவில் 83 பேரும், பீகாரில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *