கொரோனா : இந்தோனேசியாவில் சிக்கித்தவிக்கும் 430 தமிழக குடும்பங்களை மீட்க பிரதமர் மற்றும் முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தோனோசியாவில் சிக்கித் தவிக்கும் 430 தமிழ் குடும்பங்களை தமிழகத்துக்கு திரும்ப அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, மார்ச்-29

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வெளிநாடுகளில் இந்தியர்கள் பலரும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தோனிசியாவில் 400-க்கும் மேற்பட்ட தமிழக குடும்பத்தினர் சிக்கித் தவித்துவருகின்றனர். இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்தோனிசியாவில் கொரோனா வேகமாகப் பரவிவருகிறது. அதனால், தமிழ் மக்கள் கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழகம் திரும்ப விரும்புகிறார்கள். ஆனால், விமானப் போக்குவரத்து இல்லாததால் தமிழகம் திரும்ப இயலவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தோனேசியாவில் தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் 430 குடும்பத்தினர் சிக்கித் தவித்துவருகின்றனர். இந்தியர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அவர்களை மீட்டு தமிழகம் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *