கேரளாவில் மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்பிக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

கேரளாவில் ஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், மார்ச்-29

கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 14-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் பொதுமக்கள் பலரும் சாலைகளில் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கண்ணூர் மாவட்டத்தில் எஸ்.பி. யதீஷ் சந்திரா சாலையில் சுற்றி திரிந்தவர்கள், அரசின் உத்தரவை மதிக்காமல் கடைகளை திறந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கினார். இதில் கடைகளை திறந்து வைத்திருந்த 3 பேரை பிடித்து அவர்களை சாலையில் தோப்புகரணம் போட வைத்தார். இந்த காட்சிகள் வாட்ஸ்-அப்பில் வைரலானது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றே கூறியுள்ளோம். அவர்களுக்கு இதுபோன்ற தண்டனை கொடுப்பது போலீசாருக்கு அழகல்ல.
இது குறித்து உள்துறை செயலாளர் மூலம் சம்பந்தபட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *