கொரோனா பாதிப்புக்கு ஸ்பெயின் இளவரசி பலி..!

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயின், மார்ச்-29

உலகையே அச்சுறுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 812 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.
ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பாதிக்கப்பட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். வைரஸ் தொற்றின் காரணமாக அவர் உயிரிழந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *